Blog

  • 13:36 — 18 பேரை காவு வாங்கிய திருவள்ளூர் கொடூர ஆலை.. மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி ஆக்ஷன்!

    13:36 — 18 பேரை காவு வாங்கிய திருவள்ளூர் கொடூர ஆலை.. மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி ஆக்ஷன்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் கன்னிகைப்பேர் என்ற கிராமத்தில் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில், சம்பவத்தன்று திடீரென அமோனியா வாயு கசிய தொடங்கியது. இதில், ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் உடல் பாதிப்புக்கு உள்ளாகினர். இதில், 18 வடமாநில பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த ஆலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அலுவலகம், குடோன், குடியிருப்பு, தளவட அறை உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு அதிகாரிகள் இன்று திங்கள் கிழமை ( ஜூலை 13) சீல் வைத்தனர். இதேபோல தொழிற்சாலை கழிவுநீர் அகற்றும் பணியுடன், வளாகத்தில் உள்ள சுமார் 20 மரங்களை வெட்டி அகற்றும் பணியும் நடைபெற்றது.

    இறால் ஏற்றுமதி ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

    இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தொழிற்சாலையின் பிரதான நுழைவு வாயில் அதிகாரப்பூர்வமாக சீல் வைக்கப்பட்டது. திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலைக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதை தொடர்ந்து, கடல் உணவு பொருள் ஏற்றுமதி ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் துண்டித்தனர். கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் 21- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலையின் வளாகத்தில் இருந்த ஒரு தொட்டியில் இருந்து திடீரென அமோனியா வாயு கசிய தொடங்கியது. மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதி கைது!

    அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள்

    இந்த வாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் பலர் மயங்கி விழுந்தனர். அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தடுத்து சுமார் 18 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், உயிரிழந்தவர்களில் அனைவரும் பெண்களே ஆவர். பல சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பினர். இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலையின் தொட்டியில் மீதமுள்ள சுமார் 2 டன் அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி 4 நாட்களாக நடைபெற்றது.

    அமோனியா வாயு அகற்றும் பணி

    இதற்காக அந்த பகுதியை சுற்றிலும் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் கவச உடைகள் அணிந்து அமோனிய வாயுவை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். தற்போது, இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் படிக்க: அசுரன் கதாசிரியர் பூமணி காலமானார்.. அவருக்கு வயது 79!

  • 17:54 பேண்டஸி மேஜிக் கதையில்… ஃபஹத் பாசிலின் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் பட டீசர் வெளியானது..!

    17:54 பேண்டஸி மேஜிக் கதையில்… ஃபஹத் பாசிலின் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் பட டீசர் வெளியானது..!

    222 தென்னிந்த்திய மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் ஃபஹத் பாசில் (Fahadh Faasil). இவரின் நடிப்பிலும், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார். மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர், தற்போது மற்ற மொழி திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துவருகிறார். இவர் தமிழில் சமீபத்தில் வெளியான இதயம் முரளி (Idhayam Murali) என்ற படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இயக்குநரும் தயாரிப்பளாருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியிருந்த நிலையில், அதர்வா (Atharvaa) ஹீரோவாக நடித்திருந்தார். 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் இப்படமானது உலகமெங்கும் வெளியாகியிருந்த நிலையில், அதில் நகைச்சுவையான வேடத்தில் நடிகர் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். அந்த விதத்தில் தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் (S.S. Rajamouli) தயாரிப்பில், ஃபஹத் பாசில் நடித்திருந்த படம்தான் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் (Don’t Trouble The Trouble). இதை தெலுங்கு இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி (Shashank Yeleti) இயக்கியுள்ள நிலையில், இதன் டீசரை படக்குழு பகிர்ந்துள்ளது. இதையும் படிங்க: அந்த இயக்குநருடன் நேரடி தமிழ் படம் பண்ணனும் – ஜூனியர் என்டிஆர் ஓபன் டாக்!

    ஃபஹத் பாசிலின் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

    இந்த டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் படத்தின் டீசரில், ஃ பஹத் பாசில் மேஜிக் மேனாக நடித்துள்ளார். மேலும் அவருடன் சிறுமி ஒருவரும் இணைந்து நடித்துள்ளார். இதில் பஹத் பாசில் சூரி என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். சூரி மற்றும் தியா என அந்த இரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டுதான் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் முழுக்க மேஜிக், காமடி மற்றும் எமோஷனல் போன்ற கதைக்களத்தில் உருவாகியுள்ளது. தற்போது இதன் டீசர் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

    ஃபஹத் பாசிலின் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் பட ரிலீஸ் எப்போது:

    நடிகர் ஃ பஹத் பாசில் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். புஷ்பா 1 மற்றும் 2 போன்ற படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனால் இவருக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது. அதையடுத்து அவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படமாக டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் அமைந்துள்ளது. இதையும் படிங்க: இளம் ராஜனாக கென் கருணாஸ்.. தொடங்கியது ராஜன் வகையறா பட ஷூட்டிங்? இப்படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழியாக்களில் உலகமெங்கும் வெளியாகிறது. இதே தேதியில்தான் விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 17:56 England Test Team Coach: விலகிய மெக்கல்லம்.. இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்?

    17:56 England Test Team Coach: விலகிய மெக்கல்லம்.. இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்?

    இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் தற்போது குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பிரண்டன் மெக்கல்லம் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். மெக்கல்லமின் விலகலுக்குப் பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் (England Cricket Team) அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்பதில் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. தகவல்களின்படி, முன்னாள் இந்தியப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் (Rahul Dravid) இந்தப் பதவிக்கான போட்டியாளர்களில் முக்கியமான ஒருவராக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், எந்த அளவிற்கு இது உண்மை, ராகுல் டிராவிட்டிற்கு ஏற்று கொள்வாரா என்பதை தெரிந்து கொள்வோம்.

    ALSO READ: முதலிடத்தில் இங்கிலாந்து.. முடிந்த இந்தியாவின் ஆதிக்கம்.. ஐசிசி டி20 தரவரிசை அப்டேட்!

    பயிற்சியாளர் போட்டியில் யார் யார்?

    பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் டாசன் ஆகியோரை உள்ளடக்கிய சாத்தியமான வேட்பாளர்களில் டிராவிட்டும் ஒருவர். நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த தொடரில் இங்கிலாந்து 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டெஸ்ட் பயிற்சியாளராக மெக்கல்லமின் நான்காண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. வருகின்ற 2027ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆஷஸ் தொடருக்கு முன்பு ஒரு மாற்றத்தைச் செய்வதற்கு இதுவே சரியான நேரம் என்று கருதி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) இந்த முடிவை எடுத்தது. இருப்பினும், மெக்கல்லம் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச அணிகளின் பயிற்சியாளராகத் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணியில் டிராவிட்டின் பயிற்சிகாலம்:

    ராகுல் டிராவிட் இந்தியாவை 2024 டி20 உலகக் கோப்பை பட்டத்திற்கும், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் அழைத்து சென்றார். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், தற்போது முழுநேரப் பயிற்சியாளர் பணியை மேற்கொள்ள டிராவிடிற்கு விருப்பமில்லை என்று தெரிகிறது. அந்த அறிக்கையின்படி, டிராவிடிற்கு முழுநேரப் பயிற்சியாளர் பணியை மேற்கொள்ள விருப்பமில்லை, ஆனால் இங்கிலாந்தின் டெஸ்ட் பயிற்சியாளர் பதவி, வீட்டில் அதிக நேரம் செலவிடவும், அவருக்குப் பிடித்தமான இந்த ஆட்ட வடிவத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.

    ALSO READ: கெத்து காட்டும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.. சாதனை படைத்த யாஸ்திகா பாட்டியா!

    ராகுல் டிராவிட் மட்டுமின்றி, இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்கார, இங்கிலாந்து லயன்ஸ் பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

  • நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை.. நடிகையை ஆபாச படம் எடுக்க முயன்ற கும்பல் சிக்கியது.. சென்னையில் சம்பவம்!

    நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை.. நடிகையை ஆபாச படம் எடுக்க முயன்ற கும்பல் சிக்கியது.. சென்னையில் சம்பவம்!

    சென்னை மாவட்டம், சாலிகிராமம் அருணாச்சலம் சாலை பகுதியை சேர்ந்தவர் நித்தியா ( 31 வயது). இவர், சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் பெருங்குடி பகுதியை சேர்ந்த நந்தி ராமநாதன் ( 65 வயது) நித்யாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் தயாரிக்க இருக்கும் படத்தில் நடிகையாக நடிப்பதற்கு வர வேண்டும் எனவும், இது தொடர்பாக போட்டோ சூட் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய நடிகை நித்தியா சாலிகிராமம் பகுதியில் உள்ள லக்ஸ் ரெசிடென்சி என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த இடத்தில் நந்தி ராமநாதன், சென்னை தரமணி பகுதியை சேர்ந்த இந்திராணி ( 40 வயது), விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகா ( 35 வயது) மற்றும் 7 வயது குழந்தை ஆகியோர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    முகத்தை மூடி ஆபச படம் எடுக்க முயற்சி

    இதை தொடர்ந்து, கார்த்திகா என்பவர் நடிகை நித்யாவை தனது செல்போன் மூலமாக 3 முறை படம் பிடித்துள்ளார். தொடர்ந்து, நடிகை நித்யாவிடம் சாமி வேஷம் போட வேண்டி உள்ளது. இதற்காக, உடலில் எந்த பகுதியிலும் காயத் தழும்பு இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்காக முகத்தை மட்டும் மறைத்துக் கொண்டு நிர்வாணமாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நடிகை நித்தியாவிடம் கார்த்திகா கூறியுள்ளார். இதை கேட்டு நித்தியா கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அங்கிருந்து உடனடியாக வெளியே சென்றார்.

    மேலும் படிக்க: தவெக அரசுக்கு புதிய நெருக்கடி.. சிக்கிய குதிரை பேர விவகார வீடியோ ஆதாரம்.. ஆளுநரைச் சந்திக்க திமுக திட்டம்!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கைது

    இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100- க்கு தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவித்தார். அந்த தகவலின் அடிப்படையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை காவல் உதவி ஆய்வாளர் ஜானகி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், அங்கு இருந்த 7 வயது குழந்தை உள்பட அனைவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

    இதில், அந்த கும்பல் பெண்களை படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து ஆபாசமான புகைப்படம் எடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 7 வயது குழந்தையை அடையாறில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மற்ற 3 பேரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் படிக்க: மதுரையில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்.. ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலி, 41 பேர் படுகாயம்!!

  • சுட்டெரிக்கும் சூரியன்.. 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை மையம் எச்சரிக்கை..

    சுட்டெரிக்கும் சூரியன்.. 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை மையம் எச்சரிக்கை..

  • IPL 2027: 18 ஆண்டுகள் பயணம்! பிரிந்த சிஎஸ்கேவும் ஃபிளெமிங்கும்.. கிடைத்த அதிகாரப்பூர்வ அப்டேட்!

    IPL 2027: 18 ஆண்டுகள் பயணம்! பிரிந்த சிஎஸ்கேவும் ஃபிளெமிங்கும்.. கிடைத்த அதிகாரப்பூர்வ அப்டேட்!

    18 ஆண்டு கால கூட்டணிக்குப் பிறகு , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதன் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், இன்று அதாவது 2026 ஜூலை 13ம் தேதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இரு தரப்பினரும் பரஸ்பரம் இந்த கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) கடைசியாக 2023-ல் ஐபிஎல் பட்டத்தை வென்றது. இதைத் தொடர்ந்து, 2024, 2025 மற்றும் 2026 சீசன்களில் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது. ஸ்டீபன் ஃபிளெமிங்கின் தொடர்ச்சியான மோசமான செயல்திறன் காரணமாக, அவரது எதிர்காலம் குறித்து சில காலமாக கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. தற்போது, ​​ஸ்டீபன் ஃபிளெமிங்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.

    ALSO READ: இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் எப்போது..? முழு விவரம் இதோ!

    வீரரிலிருந்து பயிற்சியாளராக மாறிய ஒரு அற்புதமான பயணம்:

    • ஸ்டீபன் ஃபிளெமிங் 2008-ஆம் ஆண்டு ஐபிஎல்-இன் முதல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராக இணைந்தார்.
    • இதன் பிறகு, 2009 ஆம் ஆண்டில், ஸ்டீபன் ஃபிளெமிங் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.
    • சிஎஸ்கேவும் ஃபிளெமிங்கும் கடந்த 17 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர், மேலும் இந்த அணி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.
    • ஃபிளெமிங்கின் பயிற்சியின் கீழ், சிஎஸ்கே வெற்றியின் புதிய உச்சங்களைத் தொட்டது. அவரது தலைமையில், சிஎஸ்கே இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக்குகளில் சாம்பியன் பட்டங்களையும் வென்றது.
    • இது மட்டுமல்லாமல், சிஎஸ்கே அணி 12 முறை பிளேஆஃப் சுற்றுக்கும், 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

    ALSO READ: இந்தியாவில் பிக் பாஷ் லீக்கின் முதல் போட்டி எப்போது? எங்கு நடைபெறுகிறது?

    சிஎஸ்கே அதிகாரப்பூர்வ தகவல்:


    சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘சூப்பர் கிங்ஸும் ஸ்டீபன் ஃபிளெமிங்கும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். இதன் மூலம், இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் நீண்டகால கூட்டாண்மைகளில் ஒன்று முடிவுக்கு வந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

  • R Madhavan: எனது மகனுக்கு அந்த 2 வாழ்க்கை பாடத்தை கூறியிருக்கிறேன் – ஆர்.மாதவன் பேச்சு!

    R Madhavan: எனது மகனுக்கு அந்த 2 வாழ்க்கை பாடத்தை கூறியிருக்கிறேன் – ஆர்.மாதவன் பேச்சு!

    பான் இந்திய சினிமா வரையிலும் பேமஸான நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஆர்.மாதவன் (R.Madhavan). இவர் இறுதியாக துரந்தர் 2 (Dhurandhar 2) படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங் (Ranveer Singh) ஹீரோவாக நடித்திருந்த நிலையில், இரு பாகங்களாக வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் ஆர்.மாதவன் “அஜய் சன்யால்” என்ற வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் மிகவும் பவர் ஃபுல்லாக இருந்தது என கூறலாம். இப்படத்திற்கு பிறகு மாதவனின் நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகியுள்ளதுதான் “கோபாலசுவாமி துரைசுவாமி நாயுடு” (Gopalaswamy Doraiswamy Naidu). இதை இயக்குநர் கிருஷ்ணகுமார் ரமாகுமார் (Krishnakumar Ramakumar) இயக்கியுள்ளார்.

    இப்படமானது உண்மையான கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதியில் வெளியாகிறது. இப்பட தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்.மாதவன், அதில் தனது மகன் வேதாந்திற்கு கற்றுக்கொடுத்த 2 வாழ்க்கை பாடங்களை கூறியுள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

    இதையும் படிங்க: ட்ரெயின் படத்தை கமல் சார், அமீர் கான் சார் கூட பண்ண முடியாது – மிஷ்கின் பேச்சு!

    தனது மகனுக்கு ஆர்.மாதவன் கற்றுக்கொடுத்த 2 வாழ்க்கை பாடங்கள்:

    அந்த பேட்டியில் பேசியிருந்த நடிகர் ஆர்.மாதவன், “எனது மகன் வேதாந்திற்கு நான் இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஒன்று, நன்றியுணர்வு மனப்பான்மை. வேறொருவர் கடுமையாக உழைத்து இந்த வாழ்க்கை முறையை அவர்களுக்கு வழங்கியிருப்பதால், தாங்கள் பாக்கியசாலிகள் என்பதை குழந்தைகள் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

    இதையும் படிங்க: கத்தி படத்தில் அந்த பாடலை வைக்காததற்கு என்ன காரணம்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

    மேலும் இரண்டாவது அவரிடம், லிஃப்ட்மேன், காவலாளி, ஓட்டுநர்கள், ஆயாக்கள் என அனைவரையும் அவன் மதிக்க வேண்டும் என்பதுதான். அவர்களைச் சாதாரணமாக அழைக்காமல், அக்கா, அண்ணா என்று மரியாதையுடன் அழைக்குமாறு அவனிடம் கூறினேன் ” என அவர் தெரிவித்துள்ளார்.

    நடிகர் ஆர்.மாதவனின் இன்ஸ்டாகிராம் பதிவு:

     

    View this post on Instagram

     

    A post shared by R. Madhavan (@actormaddy)

    ஆர்.மாதவனின் நடிப்பில் GDN படமானது வெளியாக தயாராகியுள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதில் ஆர்.மாதவனுடன், பிரியாமணி,  நடிகை துஷாரா விஜயனும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதியில் வெளியாகும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு பின் தமிழிலும் புது படங்களில் முக்கியமான வேடங்களில் மாதவன் நடித்துவருகிறாராம்.

  • புதிய வாக்காளர்கள் கவனத்துக்கு.. படிவம் 6-இல் இந்த விவரம் சேர்க்க வேண்டும்.. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

    புதிய வாக்காளர்கள் கவனத்துக்கு.. படிவம் 6-இல் இந்த விவரம் சேர்க்க வேண்டும்.. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

    இந்தியாவில் வாக்காளர்களுக்கான படிவம் 6- ஐ ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் நடைமுறையை தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இந்த படிவத்தின் மூலம் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய முடியும். ஆனால், கடந்த சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் போது வாக்காளர் பட்டியலில் பெற்றோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும் பட்சத்தில், அவர்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு சமீபத்திய வடிவங்களை சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களை கோரி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இணைய வழி படிவம் 6- இல் ஜே மற்றும் கே பகுதிகளுக்கு இடையில் உள்ள மற்றொரு உறுதிமொழி பகுதியை சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அத்துடன், விண்ணப்பதாரர்களுக்கு 3 வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின், ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தொகுதி- வாக்குச்சாவடி எண் குறித்த தகவல்

    கடந்த சிறப்பு தீவிர மறு ஆய்வின் போது வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இடம்பெற்று இருந்தது.
    கடந்த சிறப்பு தேர்தல் கணக்கெடுப்பின்போது வாக்காளர் பட்டியலில் அவர்களுடைய பெற்றோர் அல்லது பாட்டன், பாட்டியின் பெயர் இருந்தது. கடந்த சிறப்பு தேர்தல் கணக்கெடுப்பின்போது, வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயரோ அல்லது அவர்களின் பெற்றோரின் பெயரோ இடம்பெறவில்லை. முதல் 2 விருப்பங்களில் ஏதேனும் ஒன்று தேர்வு செய்யப்பட்டால், விண்ணப்பதாரர்கள் கடந்த வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றிருந்த சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்குச்சாவடி எண்கள் குறித்த கூடுதல் தகவல்களை வழங்க வேண்டும்.

    மேலும் படிக்க: அரசு பேருந்தை திருடிச் சென்ற போதை ஆசாமி.. ஐதராபாத்தில் பரபரப்பு!

    3- ஆவது பிரிவை தேர்வு செய்யலாம்

    இந்த விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்கள் 3- ஆவது பிரிவை தேர்வு செய்யலாம். இருந்தாலும், இந்த தேர்வு முழு செயல்முறையையும் பாதிக்குமா இல்லையா என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இணைய வழி படிவமும், அச்சு படிவமும் வேறுபட்டவை என்பதை அறிந்திருக்க வேண்டும். இந்த புதிய படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். இந்த உறுதிமொழி பத்திரம் அதிகாரப்பூர்வமாக கட்டாயமானது என தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இணையதளத்தை பயன்படுத்தும் விண்ணப்பதாரர்கள் அதை கூட்டி செய்யாத வரை பதிவை தொடர முடியாது.

    5.58 கோடி பெயர்கள் நீக்கம்

    இணைய வழி மற்றும் நேரடி வடிவங்களுக்கு இடையிலான இந்த வேறுபாடு, புதிய விதிமுறையின் செயலகம் குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது. தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ். ஐ. ஆர். பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் சுமார் 5.58 கோடி பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் படிக்க: அரசு நிகழ்ச்சிகளில் “வந்தே மாதரம்” பாடலுக்கு முதலிடம்.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு!!

  • தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி.. 59 பள்ளிகள் புகார்; சென்னை மத்திய குற்றப்பிரிவு தீவிர விசாரணை!

    தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி.. 59 பள்ளிகள் புகார்; சென்னை மத்திய குற்றப்பிரிவு தீவிர விசாரணை!

    சென்னை, ஜூலை 13: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ₹100 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 59 பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த அரசகுமார் என்பவர், ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத போலி அமைப்பு ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

    இதையும் படிக்க: இரும்பு தகடுகள் அறுந்து விழுந்து விபத்து – 3 வயது சிறுவன் பரிதாப பலி – அதிர்ச்சி தகவல்

    நடந்தது என்ன?

    இதை நம்பி அரசகுமாரை அணுகிய தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பள்ளிகளுக்கான நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல், சி.எம்.டி.ஏ (CMDA) மற்றும் டி.டி.சி.பி (DTCP) அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் உள்ள பல பள்ளிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். ஆனால், உறுதியளித்தபடி எந்தவொரு அனுமதியையும் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார்.

    கைதும் போலீஸ் விசாரணையும்:

    ₹100 கோடிக்கும் மேல் மோசடி நடந்ததாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவரை போலீஸ் காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திடுக் தகவல்கள்:

    இந்த மோசடி தொடர்பாக இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள 59 தனியார் பள்ளிகள் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளன. இந்த 59 பள்ளிகளிடம் மட்டும் ₹7 கோடியே 34 லட்சத்திற்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்ட தொகையில் பெரும் பகுதி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலமாகப் பெறப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

    24 வங்கி கணக்குகள் முடக்கம்:

    கைது செய்யப்பட்ட அரசகுமாருக்குச் சொந்தமான 24 வங்கி கணக்குகளை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த மோசடிப் பணத்தைக் கொண்டு அவர் எங்கெங்கு சொத்துகளை வாங்கியுள்ளார் என்பது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

    இதையும் படிக்க : ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி இதை செஞ்சே ஆகணும்.. அமைச்சர் அதிரடி!!

    கூட்டாளிகளுக்கு வலைவீச்சு:

    இந்த வழக்கில் முக்கிய தொடர்புடைய நபராகக் கருதப்படும் முத்துக்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்த மோசடி வலையில் சிக்கி இதுவரை புகார் அளிக்க முன்வராத பிற பள்ளி நிர்வாகிகளின் விவரங்களையும் திரட்டும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழக கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Mysskin: ட்ரெயின் படத்தை கமல் சார், அமீர் கான் சார் கூட பண்ண முடியாது – மிஷ்கின் பேச்சு!

    Mysskin: ட்ரெயின் படத்தை கமல் சார், அமீர் கான் சார் கூட பண்ண முடியாது – மிஷ்கின் பேச்சு!

    இயக்குநர் மிஷ்கின் (Director Mysskin) இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரின் இயக்கத்தில் உருவாகும் படங்களின் கதைகளும் வித்தியாசமாக இருக்கும். இறுதியாக இவரின் இயக்கத்தில் வெளியான படம் சைக்கோ (Psycho). 2020ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பின் இயக்குநராக ட்ரெயின் (Train) மற்றும் பிசாசு 2 (Pisassu 2) போன்ற படங்களை மிஷ்கின் இயக்கியிருந்தாலும், இன்னும் வெளியாகவில்லை. இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனின் (Shruti Haasan) நடிப்பில் உருவாகியுள்ளதுதான் ட்ரெயின்.

    இப்படமானது ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள நிலையில், சிறப்பாக அமைந்துள்ளது. இதன் டீசர் ரிலீஸ் மற்றும் ஆடியோ லான்ச் என இரு நிகழ்ச்சியும் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

    இதையும் படிங்க: அரசியலை 100 சதவீதம் பின்பற்றுவேன்.. ஆனால் – அதர்வா சொன்ன விஷயம்!

    ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு குறித்து பேசிய இயக்குநர் மிஷ்கின்:

    அந்த நிகழ்ச்சியின்போது பேசிய மிஷ்கின், இந்த படத்தை விஜய் சேதுபதியை தவிர எந்த நடிகராலும் நடித்திருக்க முடியாது. ஏன் கமல் சாரினாலும் முடியாது, ஆமீர் கான் சாரினாலும் நடிக்க முடியாது. ஏனென்றால் இந்த கதை ஒருவருக்காக எழுதப்பட்டது. அதன் விஜய் சேதுபதிக்காக எழுதப்பட்டடித்து. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. நான் இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கையில் புதிதாக தெரிகிறது. என்னுடைய படம் என்பதால் நல்ல படம் என சொல்லல.

    இதையும் படிங்க: அதற்காகவே ஜன நாயகன் படத்தை பார்ப்பேன் – நடிகர் பேசில் ஜோசப் பேச்சு!

    நீங்க படம் பார்த்துவிட்டு நல்ல இல்லை என்றால் செருப்பை கழட்டி அடிங்க. மேலும் இப்படம் நல்ல இருந்தால் ஓடும், அது எனக்கு தெரியும். இதில் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார். அவரின் கதாபாத்திரமும் சூப்பராக உள்ளது. எனது வாழ்க்கையில் லாரன்ஸ் ஒளிவியே, ஒரு மிஃபுனே அவர்களுடன் பணியாற்றமுடியவில்லை, ஆனால நான் விஜய் சேதுபதியுடன் பணியாற்றியிருக்கிறேன்” என அதில் அவர் கூறியிருந்தார்.

    ட்ரெயின் படத்தின் டீசர் குறித்து விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

    விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் கூட்டணியில் ட்ரெயின் படமானது தயாராகியுள்ளது. இப்படமானது அதிரடி திரில்லர், ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.